தாய் கொலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகை – திரையுலகில் பரபரப்பு !

Published on: January 16, 2020
---Advertisement---

ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகை மோலி பிட்ஸ் தனது தாயின் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கேப்டன் அமெரிக்கா, தி ஃபஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மோலி மேக்ஸீன் பிட்ஸ்ஜெரால்டு . 38 வயதாகும் இவர் நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு வந்தா  இவர் தனது தாய் பெட்ரிஷியா பிட்ஸ் ஜெரால்டு உடன் வசித்து வந்தார்.

Image result for moly pitts murdered her mother

கடந்த மாதம் மோலியின் தாய் பெட்ரிஷியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. அவரது சடலத்துக்கு அருகில் மோலி காயமடைந்த நிலையில் இருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போலிஸார் மோலிதான் தனது தாயைக் கொலை செய்திருப்பார் என சந்தேகித்தனர்.

ஆனால் மோலியோ தனது தாய்தான் தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், தான் தற்காப்பிற்காக வேறு வழியின்றி அவரைக் கொலை செய்தேன் எனக் கூறினார். ஆனால் விசரணையில் மோலியின் தாயார் கத்தி எதையும் உபயோகப்படுத்தவில்லை என்பதைப் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மோலிக் குற்றவாளியாக அவரது தாய்க் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment