நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ என்கிற படத்திலும், மித்ரன் ஜவஹர் இயக்கும் புதிய படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார். இது போக நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார்.
அதோடு, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்திலும் ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டது. பின்னர் அது மாற்றப்படுவதாக செய்திகள் வெளியானது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்தவர். அதன்பின் மகாமுனி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இந்துஜா வாய்ப்பு தேடி வந்தார். ஆனால், சின்ன சின்ன வேடங்களே அவருக்கு கிடைத்தது. தற்போது தனுஷ் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…