
இலங்கை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் அங்கு தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். பிக்பாஸ் வீட்டில் கவின் மீது காதல் கொண்டு பல சிக்கல்களையும், பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் பெற்று ரசிகர்களின் அனுதாபத்தை சந்தித்து பிக்பாஸ் வீட்டின் இளவரசியாகவும் மாறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, பிக்பாஸ் வீட்டில் கவின் பாடிய கானா பாடலான ‘அடியே லாஸ்லியா உன் மனசு காஸ்ட்லியா’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் லாஸ்லியா பகிர்ந்துள்ளார்.
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 18, 2020