புலிக்கு பிறந்தது பூனையாகுமா? விருமன் படத்தில் அதிதி ஷங்கரின் கேரக்டர் இது தான்!

Published on: September 18, 2021
---Advertisement---

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் விருமன் என்கிற புதிய படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கவுள்ளார். நடிகர் சூர்யாவின் 2d நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முத்தையா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்து முதல் நாள் ஷூட் நடைபெற்றது. அதில் அதிதியின் தோற்றம், நடை, உடை, பாவனை என ஒரு ஹீரோயினுக்கு தேவையான அனைத்து மெட்டீரியலும் அவ்விடம் இருந்ததை கண்டு படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

63495f51ae2ca2d18cad657aaf89e29a-3

விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கப்போகும் அதிதி எம்பிபிஎஸ் படித்துள்ளதால் படபடவென ஆங்கிலத்தில் பேசுபவர். அவர் எப்படி மதுரை தமிழ் பெண்ணாக பேசுவார் என எண்ணிய படக்குழுவினருக்கு மதுரை தமிழில் பேசி கவலையை தீர்த்து வைத்தாராம். இந்நிலையில் இந்த படத்தில் மதுரை தமிழ் பெண்ணாக நடிக்கப்போகும் அதிதி தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment