சன்னி லியோன்-க்கு டஃப் கொடுப்பாங்க போலயே… பிரமாண்ட இயக்குனரின் பெயரை காப்பாற்றுவரா மகள்?

Published on: September 15, 2021
---Advertisement---

849dd69b5986db57f012b447d309a866-1

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர்.  ஜென்டில்மேன் படத்தில் தனது திரைப்பயணத்தை துவங்கி காதலன், இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் , அந்நியன் , சிவாஜி , எந்திரன் என தான் இயக்கிய அத்தனை படங்களுமே மெகா ஹிட் அடித்து தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டத்தை பெற்றார். 

இவர் தயாரிப்பாளராகவும் பல திரைபடங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் தனது இளைய மகள் அதிதி ஷங்கரை தமிழ் சினிமாவில் விருமன் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்யவுள்ளார். இப்படத்தை சூர்யா – ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2d எண்டெர்டைன்மெண்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை பல நட்சத்திரங்கள் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது. 

b331d26eead37d0937d419b12877459a-1

இந்நிலையில் ஷங்கரின் மகள் அதிதி முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஸ்ட்ராங்கான இடத்தை பிடிக்கவேண்டும் என கூறி தனக்கென சோலோவாக ஒரு குத்து பாடல் வையுங்கள் என டேடி ஷங்கரிடமே கண்டீஷன் போட்டுள்ளாராம். அம்மணி அப்பா பேரை காப்பாத்துவாங்களா? பொறுத்திருந்து பார்ப்போம். 

Leave a Comment