அட்ரா சக்கை… ஒரே நாளில் 2 படம் ரிலீஸ்… மகிழ்ச்சியில் திளைக்கும் சந்தானம்…

2 வருடங்களுக்கு முன்பே சந்தானம் நடிப்பில் உருவான திரைப்படம்  சர்வர் சுந்தரம். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. அப்படத்திற்கு பின் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2, ஏ1 உள்ளிட்ட சில படங்கள் வெளியாகிவிட்டன.

இந்நிலையில், விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்கிற படத்தில் சந்தானம் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல், சர்வர் சுந்தரமும் இதே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஒரு நாளில் 2 திரைப்படங்கள் வெளியாவது சந்தானத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram