அமரனை தூக்கி கொண்டாட நேரம் வந்துருச்சு.. கமல் வந்ததும் தடபுடலா நடக்கும் ஏற்பாடுகள்

by ராம் சுதன் |
அமரனை தூக்கி கொண்டாட நேரம் வந்துருச்சு.. கமல் வந்ததும் தடபுடலா நடக்கும் ஏற்பாடுகள்
X

அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை படித்து முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பி இருக்கிறார் கமல். வந்ததுமே விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரிடம் தக் லைஃப் படத்தை பற்றியும் விக்ரம் 2 படத்தை பற்றியும் பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இப்பொழுது தான் வந்திருக்கிறேன். விடுங்களேன்பா என்பதைப் போல கமல் அப்படியே டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார். இவர் வந்ததுமே அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா குறித்த தகவல் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் அமரன் திரைப்படம் வெளியாகி அதன் வெற்றியை கொண்டாட கமல் இங்கு இல்லை. அமெரிக்காவில் தான் இருந்தார். அதன் பிறகு இப்பொழுது தான் வந்திருக்கிறார். அதனால் அமரன் படக்குழு ஒட்டுமொத்தமாக சீக்கிரமாகவே கமலை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. படம் ரிலீஸ் ஆகி 90 நாட்களைக் கடந்த நிலையில் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை கொண்டாட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

படத்தின் வெற்றி விழாவை சாய்ராம் கல்லூரியில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அது மிக நீண்ட தூரமாக இருப்பதால் கலைவாணர் அரங்கத்திலேயே வெற்றி விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். அங்கு ஏற்கனவே விக்ரம் படத்தின் வெற்றி விழாவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதைப் பற்றி கமலிடமும் பேசி ஆலோசித்து அதன் பிறகு ஒரு முடிவை வெளியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அமரன் திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்தமாக 325 கோடி வசூலை பெற்றது. ஓவர் சீசில் 79 கோடி வசூலை பெற்றது. மிகக் குறுகிய காலத்தில் அதிகமான வசூலை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையையும் அமரன் திரைப்படம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாகவும் இந்த அமரன் திரைப்படம் அமைந்திருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பராசக்தி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்தப் படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story