அட்வான்ஸே 50 கோடியா? ஜெயிலர் 2க்கு பிறகு நெல்சன் வாழ்க்கையே மாறப் போகுது.. என்ன மேட்டர் தெரியுமா?
தவிர்க்கமுடியாத இயக்குனர்: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் நெல்சன். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் விஜய் டிவியில்தான் வேலை செய்து வந்தார்.
கிடைத்த விமர்சனம்: அதன் பிறகுதான் வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார். முதல் இரண்டு படங்கள் பெரிய ஹிட்டடிக்க அதனால் வந்த வாய்ப்புதான் பீஸ்ட். ஆனால் பீஸ்ட் படம் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றது. படத்தை பெரிய அளவில் டிரோல் செய்து வந்தனர். அப்படி இருக்கும் போதே ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. தன் மீது எறியப்பட்ட கற்களை எப்படியாவது தூக்கி எறிய வேண்டும் என நெல்சன் கடுமையாக உழைத்தார்.
கூலி : அவர் நினைத்ததை போலவே ஜெயிலர் படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 700 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 திரைப்படத்தையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு பிறகு நெல்சனுடன் இணைகிறார் ரஜினி.
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் தெலுங்கில் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவது நெல்சன் தானாம். அதற்காக நெல்சனுக்கு 50 கோடி அட்வான்ஸாக தரப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பிசினஸே இதுதானாம். முன்பே அட்வான்ஸ் தொகையாக ஒரு பெரிய தொகையை கொடுத்துவிடுவார்களாம்.
அதன் பிறகு படம் வெளியாகி கிடைக்கிற லாபத்திலும் சில தொகை மீண்டும் சம்பளமாக கொடுக்கப்படுமாம். இந்த வழக்கத்தை அஜித்திடம் தான் மாற்றியிருக்கிறார்கள் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். அஜித் கொள்கை படி மாதம் மாதம் 5 கோடி என்றளவில் சம்பளமாக அவர் பெற்றுக் கொள்கிறார். இது முற்றிலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் பின்பற்றும் முறைக்கு நேர் எதிர் என்று சொல்லப்படுகிறது.