நடிகர் ரஜினி கடந்த சில நாட்களாக தனது அறிவிக்கப்படாத கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசி வந்தார். இப்படிப்பட்ட பரபரப்பான நிலையில், ரஜினி இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அரசியலுக்கு வருவதாய் எப்போதும் கூறவில்லை. ஆண்டவன் கையில் என்றே கூறி வந்தேன். அரசியலை கவனித்து வந்தேன்…ஜெ.வின் மறைவிற்கு பின் இங்கே வெற்றிடம் உருவாகியதால் அரசியலுக்கு வருவதாய் அறிவித்தேன்.
எனக்கு அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள் உள்ளது.
திட்டம் – 1தேவையான அளவு மட்டுமே கட்சி நிர்வாகிகள்…
திட்டம் 2 – இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ பதவி…
திட்டம் 3 – கட்சிக்கு ஒரு தலைமை… ஆட்சிக்கு ஒரு தலைமை…
சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது. எனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை… எனக்கு அது ரத்தத்திலேயே இல்லை.. இளைஞரை, நேர்மையானவரை அமர வைக்க வேண்டும்… நல்லவரை முதல்வர் ஆக்குவோம்.. கட்சிக்கு மட்டுமே நான் தலைவன்… முதல்வர் பதவி வேண்டாம்…இதுவே என் திட்டம்
ஆனால், இதை மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தான் ஏமாற்றம் எனக்கூறினேன். ஆனால், அரசியலில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. எனக்கு பதவியில் ஆர்வம் இல்லை.
எனவே, இது மக்களிடம் கூற முடிவெடுத்த இங்கு வந்தேன். முடிவை மக்களிடமே விடுகிறேன். நான் முதல்வர் இல்லை என அனைவரும் பேசி அதன் மூலம் மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் ஒரு எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன். இந்த சிந்தனை இந்தியா முழுவதும் பரவ வேண்டும். அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம் என்பதே முழக்கமாக இறுக்க வேண்டும்.
என அவர் பேசினார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…