Categories: latest news

Vadivelu: கைப்புள்ளைக்கு கட்டம் சரியில்ல.. விஜயை எதிர்த்து வடிவேலுவா? மறுபடியும் முதல்ல இருந்தா?

வடிவேலு:

தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. எந்தவொரு அரசியல் சாயமும் பூச்சிக் கொள்ளாமல் தன்னுடைய துறையில் முன்னேறி கொண்டிருந்தார். வைகைப்புயல் என அன்போடு அழைக்கப்பட்ட வடிவேலு அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கிங்காக வலம் வந்தார்.

கைப்புள்ளைக்கு கட்டம் சரியில்லைனு சொல்லுவாங்க. அப்படி 2011 ஆம் ஆண்டு தங்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என திமுக-விடமிருந்து அழைப்பு வந்தது வடிவேலுவுக்கு. அந்த நேரத்தில்தான் விஜயகாந்துடன் சிறு பிரச்சினையில் இருந்தார். இதுதான் வாய்ப்பு என கருதி திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். அதே நேரம் விஜயகாந்துக்கு எதிராக கடுமையாக விமர்சித்தார்.

அமைதியாக இருந்த விஜயகாந்த்:

ஆனால் விஜயகாந்தோ வடிவேலு பேசுவதற்கு யாரும் எதிர்வினை ஆற்ற கூடாது என தனது கட்சியினருக்கு கூறிவந்தார். அதை போல் பிரச்சாரத்தில் வடிவேலுவுக்கு எதிராக ஒரு கருத்தை கூட விஜயகாந்த் முன் வைக்கவில்லை. அதை போல் அதிமுகவிற்கு எதிராகவும் வடிவேலு விமர்சித்து வந்தார். தன்னை ஒரு எம்ஜிஆராக நினைத்ததால்தான் விஜயகாந்தை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாரோ என்றெல்லாம் விமர்சித்தார்.

போதாத காலம் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற யாரும் எதிர்பாராத வகையில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உட்கார்ந்தார். இது திமுகவை விட வடிவேலுவுக்கு பெருத்த அடியாக இருந்தது. நேரடியாக விஜயகாந்தோ ஜெயலலிதாவோ சொல்லவில்லை என்றாலும் வடிவேலுவுக்கு படங்களில் வாய்ப்பு கொடுக்க பல நிறுவனங்கள் தயங்கினார்கள்.

சினிமாவில் இருந்து விலகிய வடிவேலு:

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் வாய்ப்பில்லாமல் வடிவேலு இருந்தார். ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் முன்பை போல அவருடைய படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதாலும் மாமன்னன் படத்தில் உதய நிதியுடன் நடித்ததனாலும் மறுபடியும் திமுகவினருடன் உறவாடி கொண்டு வருகிறார் வடிவேலு. சமீபத்தில் உதய நிதி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது கூட இந்த கூட்டணியை யாரும் அசைக்க முடியாது என்றெல்லாம் பேசினார்.

அவன் இவன் சண்டை போடுறதெல்லாம் எங்களுக்கு சாதகம் தான் என்றும் கூறினார். மேலும் வரும் 2026 தேர்தலிலும் ஸ்டாலின் ஐயாதான் முதல்வர் என்றும் கூறினார். மேலும் திமுகவில் நானும் ஓரமாக இருக்கிறேன். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். அதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மறுபடியும் வடிவேலு பிரச்சாரத்தில் ஈடுபட போகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்ய போகிறார் என்றும் கூறப்படுகிறது. அதற்காக திமுகவினர் வடிவேலுவை தயார்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மறுபடியும் முதல்ல இருந்தா? என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தவராக இருப்பவர் விஜய். விஜய்க்கு எதிராக வடிவேலு இருந்தால்  நிச்சயமாக 2கே கிட்ஸ்கள் வடிவேலுவை சும்மா விட மாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய அடி பத்தலையா வடிவேலு அண்ணே! 

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago