More

எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டோம் – ஏஜிஎஸ் நிறுவனம் அறிக்கை

பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் மரணமடைந்தர்.  சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரையுலகம் மீளாத நிலையில் கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.ஆனந்தின் மறைவுக்கு ரஜினி, கமல்ஹாசன், வைரமுத்து, சிம்பு, தனுஷ் உட்பட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், கே.வி.ஆனந்தை வைத்து மாற்றான், அனேகன், கவன் ஆகிய திரைப்படங்களை தயாரித்த ஏஜி.எஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில் ‘ஏஜிஎஸ்ஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை நாங்கள் இழந்து நிற்கிறோம். கேவி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும் மிகச்சிறந்த இயக்குனரும் ஆவார். முக்கியமான சமூக பிரச்சனைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர் ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்’ என தெரிவித்துள்ளது.

விரைவில், ஏஜிஎஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை கே.வி.ஆனந்த் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts