
ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை, வேதாளம், வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு 4 நாட்கள் கொல்கத்தாவில் நடைபெறுவதாகவும், ரஜினி கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் வடபழனியில் உள்ள ஃபோரம் ஹாலின் கார் பார்க்கிங் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது.

அண்ணாத்த படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகிவிட்டது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடியை தொடும் என்பதால் இப்படத்தை தயாரிப்பதிலிருந்து ஏஜிஎஸ் நிறுவனம் பின் வாங்கிவிட்டது.

எனவே, லைக்கா புரடெக்ஷன் நிறுவனத்தை அணுக ரஜினி திட்டமிட்டுள்ளாராம். தற்போது அதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. ஒருவேளை அவர்களும் பின் வாங்கினால் இருக்கவே இருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் என ரஜினி கருதுகிறாராம்.

ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படம் துவங்கிய போது பட்ஜெட் காரணமாக அப்படத்தை தயாரித்து வந்த ஐங்கரன் நிறுவனம் ஜகா வாங்கியது. எனவே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கதவை தட்டினார் ரஜினி. அதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோன்ற நிலை மீண்டும் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளது.
சரி சம்பளமாக ரூ.100 கோடி கொடுக்க ஒரு கம்பெனி வேண்டுமே!….





