எனக்கு எய்ட்ஸ் இருக்குடா… இளம்பெண் கதறியும் காதில் வாங்காமல் கற்பழித்த வாலிபர்கள்….

பீகார் மாநிலம் கைமூர் பகுதியில் வசித்து வரும் 22 வய்து பெண் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு நேற்று நள்ளிரவு பபுவா ரயில் நிலையத்திற்கு வந்தார். அதன்பின் அங்கிருந்து பாட்னா செல்லும் ரயிலில் ஏறியுள்ளார்.

இவர் அமர்ந்திருந்த பெட்டியில் இவரை தவிர யாரும் இல்லை. அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக அப்பெண் கூறியும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அப்போது அங்கு வந்த ஒரு ரயில்வே காவல் அதிகாரியை கண்டதும் இருவரும் தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் அவர் மடக்கி பிடித்தார். விசாரணையில் அவர்கள் இருவரும் கைமூர் மாவட்டம் சாய்தா பகுதியில் வசிக்கும் பிரேந்திரசிங்(26), திபக் சிங்(28) என்பது தெரியவந்தது. 

Published by
adminram