ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயதுதான்: பீதியை கிளப்பும் வாலிபர்

நடிகை ஐஸ்வர்யா ராய் தான் தனது அம்மா என்று வாலிபர் ஒருவர் பீதியை கிளப்பியுள்ளார்.

இந்தியா  மட்டுமின்றி உலக முழுவதுமே நன்கு அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகியாக வெற்றி பெற்ற இவர் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் சில பாலிவுட் படங்களில் தலை காட்டி வருகிறார்,

இந்த நிலையில் புது புயலை கிளப்பியுள்ளார் வாலிபர் ஒருவர். மங்களூரைச் சேர்ந்தவர் சங்கீத்ராய் குமார் என்ற 31 வயது வாலிபர் ஐஸ்வர்யா ராய் தன்னை பெற்றெடுத்த தாய் என்று கடந்த ஆண்டு இவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது நமக்கு தெரிந்ததே.

அந்த வீடியோவில் ஐஸ்வர்யா ராய்தான் என் அம்மா. என்னை பெற்றெடுக்கும்போது அவருக்கு வயது 15 வயது. செயற்கை கருத்தறித்தல் மூலம் என்னை பெற்றார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் என் அம்மாவின் செல்போன் நம்பரையாவது தர வேண்டும். எனக்கு என் அம்மா வேண்டும்' என்று கூறியிருந்தார் அவர். ஆனால் எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சங்கீத்ராய் குமார் மீண்டும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் இரண்டு வயது வரை என்னை என் பாட்டி பிருந்தா ராயும் தாத்தா கிருஷ்ணராஜ் ராயும் வளர்த்தனர். பின்னர் என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார். எனது பிறப்பு சான்றிதழ்களை எனது உறவினர்கள் அழித்துவிட்டனர். எப்படியாவது என் அம்மாவை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Published by
adminram