பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்... 59 வயசில் அர்ஜுன் செய்யப்போகும் காரியம்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து ஆக்ஷன் கிங் என புகழ்பெற்றவர் நடிகர் அர்ஜுன். அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது.
கராத்தேவில் புகுந்து விளையாடும் அர்ஜுன் தனது உடலை 59 வயதாகியும் இளம் நடிகரை போன்றே மெயின்டைன் செய்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியராகவும் அர்ஜுன் விசாரணை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளனர். எனவே இது காக்க காக்க ஜோதிகா சூர்யா போன்று இருக்கும் என யூகிக்கமுடிகிறது. இத்தனை வயசாகியும் இளமையாக இருப்பதால் அர்ஜுன் இளம் நடிகைகளோடு ஜோடி போட முடியுது என முணுமுணுக்கிறது கோலிவுட். இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளனர்.