More

எத்தனை பேர ஏமாத்துவீங்க!…. வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த வீடியோ…

சமூக வலைத்தளங்களில் நேற்று திடீரென #ஹிந்தி_தெரியாது_போடா என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. எனவே, பலரும் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

‘நான் தமிழ் பேசும் இந்தியன்’ என எழுதப்பட்ட டீ சர்ட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், ஹிந்தி தெரியாது போடா என எழுதப்பட்ட டீ சர்ட்டை ‘மெட்ரோ’ பட நடிகர் சிரிஷும் அணிந்திருந்த புகைப்படம் வெளியான பின்னரே இந்த ஹேஷ்டேக் வைரலானது. இதற்கிடையில், #ஹிந்தி_தெரியாது_போடா  என பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் அணிந்து போஸ் கொடுத்தார்.

இந்நிலையில், மும்பையில் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்ட போது, எனக்கு ஹிந்தி தெரியும் எனக்கூரி சில வாக்கியங்களை ஹிந்தியில் பேசியும் காண்பிக்கும் வீடியோவை சில பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து ‘இன்னும் எத்தனை பேரை ஏமாற்றுவீர்கள்?’ என பதிவிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

 

Published by
adminram

Recent Posts