எவ்வளவு பட்டும் திருந்தல!.. ரஜினி சொல்லியும் கேட்கல!.. ஐஸ்வர்யா போடும் அடுத்த பிளான்!...
முதல் அறிமுகம்: தமிழ் சினிமாவில் மூணு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த அந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றி அடைந்தது. பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமான பாடலாக மாறியது. தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினி காந்த் திருமணத்திற்கு பிறகு இருவரும் கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.
தனுஷுடன் மோதல்: அதன் பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவருமே விவாகரத்து பெற்று தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரைப் போலவே இவருடைய சகோதரி சௌந்தர்யாவும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இருவருமே தன்னுடைய தந்தையான ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
அப்பாவுக்கு ஆப்பு வைத்த தருணம்: ஆனால் இவர்கள் இயக்கிய ரஜினிகாந்தின் படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்பதுதான் உண்மை. கோச்சடையான் படத்தை எடுத்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். அதைப் போல ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் எந்த அளவு மொக்கை வாங்கியது என அனைவருக்கும் தெரிந்த விஷயம் .இதைப் பற்றி ரஜினிகாந்த் ஒரு மேடையில் பேசும்போது என்னுடைய மகள்கள் இருவரையும் படங்களை இயக்குவதையோ தயாரிப்பதையோ விட்டுவிடுங்கள். இது ஒரு கட்டத்திற்கு மேல் சரிவராது என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்கிறேன்.
மீண்டும் முயற்சியில்: ஆனால் இப்போது அவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது போல ஒரு மேடையில் பேசியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே ஐஸ்வர்யாவும் சரி சௌந்தர்யாவும் சரி சினிமாவில் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. இருந்தாலும் விடாமல் போராடுவேன் என்ற எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் .
வாழை போன்ற ஒரு சின்ன பட்ஜெட் படத்தை அதாவது கன்டென்ட் ஓரியண்டட் ஆன ஒரு படத்தை எடுப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறாராம். முற்றிலும் புது முகங்களை வைத்து இந்த படத்தை எடுக்க போவதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் பூஜை ஏப்ரல் மாதம் நான்காம் தேதி போடப்படுவதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது .அந்த படத்தை இயக்குவது மட்டுமல்ல படத்தை தயாரிப்பதும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என சொல்லப்படுகிறது.