Categories: latest news

நாளைக்கு சினிமால என்ன பண்ணனு என் பொண்ணு கேட்டுட கூடாது.. அதான் இந்தப் படம்! அஜித்தே சொன்னது

ஏற்கனவே ஸ்பாட் லைட்டுக்கு வந்த அஜித்; அஜித்தை பற்றி பல விஷயங்களை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ரெங்க ராஜ் பாண்டே ஒரு பேட்டியில் கூறியது: ஸ்பாட் லைட்டில் இருக்கிற ஒரு நடிகர் தான் அஜித். அஜித்தால் ஒரு விமானத்தில் கூட போக முடியாது. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்து நாங்கள் திரும்பி வரும் பொழுது அஜித் ஒரு ஸ்பெஷல் பிளைட்டில் வந்தார். எனக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ஷூட்டிங் முடிந்து விட்டது. நான் கிளம்பும்போது இரண்டு நாள் காத்திருங்கள். நாம் சேர்ந்து போகலாம் என அஜித் சொன்னார். அவருடன் சேர்ந்து நான் சார்ட்டட் பிளைட்டில் தான் வந்தேன். அப்பொழுது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏன் சார்ட்டட் ஃபிளைட்டில் வரவேண்டும் என யோசித்தேன்.

சாதாரணமாக வெளியில் வரமுடியாது: ஆனால் அப்பொழுது தான் தெரிந்தது. வெளியில் வந்தால் அவரை பிச்சி குதற ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் .நம்மை மாதிரி ஒரு சாதாரண ஆட்களே வெளியே வரும் பொழுது ஓ இவரா என செல்பி எடுக்க முண்டி அடித்து வருகின்றனர். ஆனால் அவரை மாதிரி ஒருத்தர் வெளியே வரும் பொழுது அவர் மீது உள்ள கிரேஸ் ரசிகர்களை இன்னும் பரவசப்படுத்துகின்றன. அதனால் அஜித்தால் ஒரு பிளைட்டில் போக முடியாது, ஒரு ட்ரைய்னில் போக முடியாது. ஒரு பஸ்ஸில் போக முடியாது. அவர் வீட்டு வாசலிலேயே தவம் கிடக்கின்றனர் .

வெறி கொண்ட ரசிகர்கள்: நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஹோட்டலில் ஒரு ரூம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை அறிந்து ரசிகர்கள் ஒரு பத்து பேர் அவருக்கு எதிரே உள்ள ரூமை புக் செய்து எப்போ தல வெளியில வருவார் என காத்துக் கொண்டிருக்கின்றனர். அதை நான் என் கண்கூடாக நேரில் பார்த்தேன். அப்படி ஒரு வெறி கொண்ட பேன் பாலோயர்ஸ் அஜித்துக்கு இருக்கிறார்கள். அதனால் அவர் எப்பொழுதுமே ஸ்பாட்லைட்டில் தான் இருக்கிறார்.

ஷாலினி மீது பயமா? : இதைத் தாண்டி குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார் அஜித். அவர் குடும்பத்தை பெரிய அளவு மதித்து வருகிறார் .அவருடைய மனைவி ஷாலினியிடம் போனில் பேசும் பொழுது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவு அன்போடு பேசுகிறார். வார்த்தைக்கு முன்பும் பின்பும் அந்த அளவுக்கு லவ் அவர் வாயிலிருந்து கொட்டுகிறது. டியர் டார்லிங் இப்படித்தான் அஜித் ஷாலினியை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார் .நான் கூட அந்த அளவுக்கு அண்ணி மீது பயமா என கேட்டதற்கு அதற்கு அஜித் ஷாலினியை நான் மிஸ் பண்ணிட கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை என சொன்னார்.

அதே மாதிரி நேர்கொண்ட பார்வை படம் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டபோது என்னுடைய பொண்ணு நாளைக்கு நீ சினிமாவில் என்ன பண்ணனு கேட்டா நான் காட்டுவதற்கு ஒரு படம் வேண்டும். மக்களுக்கு ரசிகர்களுக்கு தொண்டர்களுக்கு அவர்களை திருப்தி படுத்த அது வேற படம் .அடுத்த தலைமுறைக்கு கொடுக்கிறதுக்கு ஒரு படம் வேண்டும். அதனால் இது மாதிரியான விஷயங்களை சேர்த்து அவர் டிராவல் செய்கிறார். நேர்கொண்ட பார்வை படம் பண்ணும் பொழுது கமர்சியலா சக்சஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் அப்பொழுதே இருந்தது.

சக்சஸ் ஆனது என்பது வேறு விஷயம். ஆனால் அந்த ரிஸ்கை எடுத்தார் அஜித். அமிதாப்பச்சன் ரிட்டையர்ட் ஆகி 15 வருடம் கழித்து இந்த ரிஸ்கை எடுத்தார். ஆனால் அஜித் பீக்கில் இருக்கும் போதே இந்த ரிஸ்கை எடுத்தார். இது ஒரு தத்துவ ரீதியான படம். இந்த மாதிரி படங்கள் எல்லாம் இவர் இப்பொழுது பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிவாஜி எம்ஜிஆர் மாதிரியான படங்களை இப்ப பண்ணனும் அப்படிங்கற அவசியம் இல்லை. ஆனால் குடும்பம் தன்னுடைய தனிப்பட்ட தாகம் எல்லாவற்றையும் ஒரே சீரான முறையில் கொண்டு போகக்கூடிய நடிகராக இருக்கிறார் அஜித் என ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago