அஜித்தும் தோனியும்…. விஜய்யும் கோலியும் – பிரபல நடிகரின் ஒப்பீடு !

தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோவாக வளர்ந்து வரும் அருண் விஜட் சமீபத்தில் தன் சக நடிகர்களை கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இருந்து வந்தாலும் இப்போது அருண் விஜய்க்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்ததில் இருந்து அவர் மீது எக்ஸ்ட்ரா கவனம் குவிய ஆரம்பித்துள்ளது.

இப்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் மாஃபியா படம் திரைக்கு வரவுள்ளது. அதற்கான புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர், சமீபத்தில் ஒரு நேர்காணலை அளித்தார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிட சொன்னார்.

அதற்கு விஜய்யை கோலியுடனும், அஜித்தை தோனியுடனும், ரஜினியை சச்சினோடும், கமலை கங்குலியோடும் ஒப்பிட்டு பதிலளித்தார்.

Published by
adminram