நண்பர்கள் எப்படி பேசி எப்படி பழக வேண்டும் என்பதற்கு நடிகர்கள் பலரை உதாரணமாகச் சொல்லலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் பிரசாந்த். அனைவருடனும் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பழகக்கூடியவர்.
‘தல’ அஜீத்துடன் இவர் ‘கல்லூரி வாசல்’ என்ற ஒரே படத்தில் மட்டும் இணைந்து நடித்துள்ளார். அந்தப் படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
2001ல் கமல் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் ‘பிரியாத வரம் வேண்டும்’. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பேபி ஷாமிலி. இந்தப் படத்தில் நடித்த அடுத்த வருடம் அவருக்கு அஜீத்துடன் கல்யாணம் ஆனது.
அதனால் நிகழ்ச்சியில் ஆங்கர் பிரசாந்திடம் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றைக் காட்டி இதுபற்றி கருத்து கேட்டார். அதற்கு பிரசாந்த் பேபி ஷாலினியோட குடும்பத்தில் எல்லாருமே எனக்கு நல்ல பழக்கம். காமெடியா சொல்லணும்னா அவர் நல்ல சாப்பிடக்கூடியவர். எந்தெந்த ரெஸ்டாரண்ட்ல நல்லாருக்கும்னு சொல்வார்.
கேரளாவில் சூட்டிங் நடந்தது. ‘இங்க போகலாம். அங்க போகலாம்’னு சொல்வாங்க. நல்ல நட்புடன் இருந்தாங்க. அஜீத் சார் செட்டுக்கு எல்லாம் பார்க்க வந்தாரான்னு கேட்டாங்க. ‘இல்ல’ன்னு சொன்னார் பிரசாந்த்.
அடுத்ததாக அஜீத்துடன் உங்க நட்பு எப்படி இருந்ததுன்னு கேட்டார். அதற்கு அஜீத்துடன் கல்லூரி வாசல் படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தேன். எளிமையான மனிதர். அமைதியானவர். அவர் கூட நடிப்பதற்கு நல்லா இருக்கும். கல்யாணம் பண்ணும்போது அஜீத் சார் மட்டுமல்ல யாருக்கும் அட்வைஸ் கொடுக்க மாட்டேன்.
அப்படித்தான் அஜீத் சார் கல்யாணம் பண்ணப் போறாருன்னதும் அட்வைஸ் எதுவும் கொடுக்கவில்லை. கருத்து மட்டும் தான் தெரிவித்தேன் என்ற பிரசாந்திடம் ஆங்கர் என்ன பேசுனீங்கன்னு கேட்டாங்க. அதற்கு உஷாரான பிரசாந்த் நண்பர்களுக்குள் பேசுற விஷயத்தை எப்பவுமே வெளியே சொல்லக்கூடாது என்றார் டாப்ஸ்டார் பிரசாந்த்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…
Delhi Ganesh:…
கங்குவா படம்…