அஜீத்தும், வடிவேலுவும் முட்டிக்கொண்ட படம் இதுதான்... அப்புறம் மனுஷன் திரும்பிக்கூட பார்க்கலயாம்..!
நடிகர் வடிவேலு படங்களில் நக்கலும், நய்யாண்டியும், கிண்டலும், கேலியும், கூத்துமாக அலப்பறை செய்வார் என்பது தெரிந்த விஷயம். அவரது பாடி லாங்குவேஜூம் அதுக்கு ஈடு கொடுக்கும். அதே போல அவர் செய்யும் காமெடி எல்லாமே அட்டகாசமாக ரசிகர்களை சிரிக்க வைக்கும். அவரது காமெடி எப்பவுமே இன்று வரை ட்ரெண்ட் செட்டாகத் தான் உள்ளது. ஆனால் தல கிட்டயே தன்னோட வேலையைக் காட்டலாமா... வாங்க அது என்ன சம்பவம்னு பார்க்கலாம்.
நடிகர் அஜித்தும், வடிவேலுவும் இணைந்து நடித்த படம் பூவெல்லாம் உன் வாசம். இது காதல் கலந்த குடும்ப படம். இந்தப் படத்தை எழில் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் பட்டையைக் கிளப்பும்.
இந்தப் படத்தில் வடிவேலு தான் அஜித்தின் மாமா. தொடர்ந்து இருவரக்கும் இடையிலான காமெடி காட்சிகளும் ரசிக்கும் வகையில் வந்து இருந்தது. படத்தில் அஜித்தின் மாமா என்பதால் வடிவேலு அவரை 'வாடா, போடா'ன்னு தான் அழைப்பார். அப்படித்தான் காட்சிகளும் இருக்கும். ஆனால் வடிவேலு சூட்டிங்கிற்குப் பிறகும் அதையே தொடர்ந்துள்ளார்.
அது அஜித்துக்குப் பிடிக்கவில்லையாம். இது பிரச்சனையாகி உள்ளது. அதனால் இது பற்றி இயக்குனர் எழிலிடம் பேசியிருக்கிறார். அவரும் வடிவேலுவிடம் இனி அப்படி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் வடிவேலு கேட்கவில்லை. மீண்டும் அப்படியே அஜித்தை அழைத்துள்ளார். இதனால் அந்தப் படத்தில் வடிவேலுவுடன் வேண்டா வெறுப்பாக நடித்து முடித்தாராம் அஜித். அதன்பிறகு அவர் கூட எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பாங்க'ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்த விஷயத்தில் இவர்களுக்குப் பொருந்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.