அஜீத்தும், வடிவேலுவும் முட்டிக்கொண்ட படம் இதுதான்… அப்புறம் மனுஷன் திரும்பிக்கூட பார்க்கலயாம்..!

நடிகர் வடிவேலு படங்களில் நக்கலும், நய்யாண்டியும், கிண்டலும், கேலியும், கூத்துமாக அலப்பறை செய்வார் என்பது தெரிந்த விஷயம். அவரது பாடி லாங்குவேஜூம் அதுக்கு ஈடு கொடுக்கும். அதே போல அவர் செய்யும் காமெடி எல்லாமே அட்டகாசமாக ரசிகர்களை சிரிக்க வைக்கும். அவரது காமெடி எப்பவுமே இன்று வரை ட்ரெண்ட் செட்டாகத் தான் உள்ளது. ஆனால் தல கிட்டயே தன்னோட வேலையைக் காட்டலாமா… வாங்க அது என்ன சம்பவம்னு பார்க்கலாம்.

நடிகர் அஜித்தும், வடிவேலுவும் இணைந்து நடித்த படம் பூவெல்லாம் உன் வாசம். இது காதல் கலந்த குடும்ப படம். இந்தப் படத்தை எழில் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் பட்டையைக் கிளப்பும்.

இந்தப் படத்தில் வடிவேலு தான் அஜித்தின் மாமா. தொடர்ந்து இருவரக்கும் இடையிலான காமெடி காட்சிகளும் ரசிக்கும் வகையில் வந்து இருந்தது. படத்தில் அஜித்தின் மாமா என்பதால் வடிவேலு அவரை ‘வாடா, போடா’ன்னு தான் அழைப்பார். அப்படித்தான் காட்சிகளும் இருக்கும். ஆனால் வடிவேலு சூட்டிங்கிற்குப் பிறகும் அதையே தொடர்ந்துள்ளார்.

அது அஜித்துக்குப் பிடிக்கவில்லையாம். இது பிரச்சனையாகி உள்ளது. அதனால் இது பற்றி இயக்குனர் எழிலிடம் பேசியிருக்கிறார். அவரும் வடிவேலுவிடம் இனி அப்படி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனாலும் வடிவேலு கேட்கவில்லை. மீண்டும் அப்படியே அஜித்தை அழைத்துள்ளார். இதனால் அந்தப் படத்தில் வடிவேலுவுடன் வேண்டா வெறுப்பாக நடித்து முடித்தாராம் அஜித். அதன்பிறகு அவர் கூட எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்பாங்க’ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்த விஷயத்தில் இவர்களுக்குப் பொருந்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

16 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

16 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

24 hours ago