ரஜினி போல அஜித்தும் செய்யலாமே! கே.ராஜன் வேண்டுகோள்

Published on: January 30, 2020
---Advertisement---

f69760335ab36cde1abb49ab1de140a8

ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது தன்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு ரஜினிகாந்த் உதவி செய்வது போல அஜித்தும் உதவி செய்ய வேண்டுமென சினிமா விழா ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சினிமா தொழிலில் நலிவடைந்தவர்களுக்காக அருணாச்சலம், பாண்டியன் ஆகிய படங்களை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்தார் என்றும் அந்த படங்களில் வெற்றியால் அதன் தயாரிப்பாளர்கள் சொந்த வீடு வாங்கி தங்கள் வறுமையைப் போக்கிக் கொண்டார்கள் என்றும் அதே போல் தன்னை முதல் முதலாக ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களுக்கு ரஜினிகாந்த் தனது சொந்த செலவில் வீடு வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்

அதேபோல் அஜீத் தன்னை வைத்து முதல் படம் எடுத்த சோழா பொன்னுரங்கம் மற்றும் வெற்றிப்படங்களை கொடுத்த சிவசக்தி பாண்டியன் போன்றவர்களுக்காக ஒரு படம் நடித்து கொடுக்க வேண்டும் என்றும் கோடீஸ்வரரான போனி கபூருக்கு அவர் தொடர்ந்து படங்களில் நடித்து கொடுப்பது வருத்தத்திற்கு உரியதாக இருப்பதாகவும் தெரிவித்தார் 

இன்றைக்கு உச்ச நிலையில் உள்ள நட்சத்திரங்கள் அனைவரும் ஒரு காலத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் இருந்து வந்தவர்கள்தான் என்றும் அவ்வாறு ஹீரோக்களுக்கு கைகொடுத்த தயாரிப்பாளர்களை மறந்து விடாமல் அவர்களை காப்பாற்றும் வகையில் ஒரு சிறு முயற்சியாக உச்ச நட்சத்திரங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் 

கே ராஜன் வேண்டுகோளை ஏற்று அஜீத் உள்பட உச்ச நட்சத்திரங்கள் தங்களை அறிமுகம் செய்த இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உதவி செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment