அஜித் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஜி திரைப்படம் தோல்வி அடைந்தது குறித்து இயக்குனர் லிங்கு சாமி மனம் விட்டுப் பேசியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜி. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனாலும் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து இயக்குனர் லிங்கு சாமி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் ‘முதலில் நான் இந்த கதையை மாதவனுக்குதான் தயார் செய்தேன். ஆனால் அவர் இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் சொன்னார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அதன் பின்னர் சித்தார்த்தை வைத்து இயக்கலாம் என முடிவு செய்தேன். அதுவும் வேலை செய்யாததால் பின்னர் அஜித்துக்குக் கூறினேன். அப்போதே அவரிடம் நான் கல்லூரி மாணவன் போல எடையை குறைக்கவேண்டும். மற்றும் ஒரிஜினலாக தாடி வளர்க்கவேண்டும் என கூறினேன். அவரால் இரண்டையும் செய்ய முடியவில்லை. ஆனால் என்னை நம்பி முழுவதுமாக தன்னை ஒப்படைத்தார். அதற்கு முன்னால் ரன் படத்தின் வெற்றியின் தலைக்கணமோ என்னவோ தெரியவில்லை… நான் சில இடங்களில் கோட்டை விட்டுவிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…