கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் நோயை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்து வருகிறார்கள்.
மறுபக்கம் திரைப்பட நடிகர்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் நிதி கொடுத்துள்ள நிலையில், விஜயும், அஜித்தும் இதுவரை எந்த நிதியும் அளிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் முதல்வர் நிவாரண நிதிக்கு ரு.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சமும். மக்கள் தொடர்பு அதிகாரிகள் யூனியனுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்கியுள்ளார்.
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…