கிரிக்கெட் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்..வைரல் வீடியோ…

போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல். வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். போனி கபூரை மட்டும் கேட்டால் பரவாயில்லை, முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, பாஜக பிரமுகர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடி, பிரபல கிரிக்கெட் வீரர்கள் என ஒருவரையும் அஜித் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. எல்லோரிடமும் அவர்கள் வலிமை அப்டேட்டை கேட்டனர். 

எனவே, கடுப்பான அஜித் பொறுமையாக இருக்கும்படி அறிக்கையே வெளியிட்டார். ஆனாலும், அஜித் ரசிகர்கள் மாறவில்லை.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டே’ என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடம் அவர்கள் அந்த போர்டை காட்டிய வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

 

Published by
adminram