Connect with us

அஜீத் வலிமை பாட்டிற்கு ரன்வீர் சிங்கை ஆட வைத்த குறும்புகார ரசிகர்கள்

அஜீத் வலிமை பாட்டிற்கு ரன்வீர் சிங்கை ஆட வைத்த குறும்புகார ரசிகர்கள்

எங்கு சென்றாலும் வேற மாதிரி பாடல் ஒலிக்க, யுடியூபில் இந்த பாடலை சுமார் 2 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர்.

b21db86e5d3dc7145c9f33b5907b225a

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் – ஹெச்.வினோத் – அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். 

யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக படம் குறித்த அப்டேட் அனைத்துமே தள்ளிப்போக, ரசிகர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றியாக கடந்த 11ம் தேதி மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. 

aec929b316b04215b37fb20806662feb

யுவன் ஷங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’ எனத் தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. 

வலிமை படத்தை தீபாவளி விருந்தாக தியேட்டர்களில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தல அஜித் வலிமை படத்தில் என்ன பெயரில் நடித்துள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன்னதாக வலிமை ஒரு குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஆக்‌ஷன் திரைப்படம் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தில் அஜித் அர்ஜுன் என்ற பெயரில் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

எங்கு சென்றாலும் வேற மாதிரி பாடல் ஒலிக்க, யுடியூபில் இந்த பாடலை சுமார் 2 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் இந்த பாடலுக்கு ரன்வீர் சிங் நடனமாடியது தான் வைரல்..உண்மையாவே ஆடவில்லை. குறும்புக்கார ரசிகர் ஒருவர் செய்த எடிட் தான் தற்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது.

 

Continue Reading
To Top