More

வரிவட்டுங்க விஜய்…டிவிட்டரில் டிரெண்டிங்….விஜயை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரின் சம்பளம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சம்பளத்தை நெருங்கி விட்டது. அதாவது அவர் ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

விஜய் 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார் செய்தார். இந்திய சட்டப்படி வெளிநாட்டிலிருந்து ஒரு காரை இறக்குமதி செய்தால் அதற்கு குறிப்பிட்ட சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆனால், விஜய் அந்த வரியை கட்டவில்லை. மேலும், தனக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், விஜயின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். 

அதோடு, திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் நீதிபதி அறிவுரையும் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #வரிகட்டுங்க_விஜய் என்கிற ஹேஷ்டேக் மூலம் விஜயை கிண்டலடித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் டிவிட்கள் பதிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து,  இதற்கு எதிராக களம் இறங்கிய விஜய் ரசிகர்கள் #WeSupportThalapathyvijay மற்றும் #கடனைஅடைங்கஅஜித் என்கிற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வருகின்றனர். 
 

Published by
adminram

Recent Posts