அஜித் பட இயக்குனரின் மகன் மரணம் – சோகத்தில் குடும்பம் !

8cc6599bd8c27e944c426c8f0adff746

அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இயக்கிய ராஜ்கபூரின் மகன் மரணமடைந்தது அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனராக தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஜ்கபூர். அதன் பின்னர் அவர் அவள் வருவாளா , ஆனந்த பூங்காற்றே, வள்ளல் மற்றும் சமஸ்தானம் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பின் நடிப்புக்குள் புகுந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

raj-kapoor-son-2

ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும், ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும், ஷமீமா கபூர், ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்இதில் ஷாருக் கபூருக்கு கடந்த ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் போனதால் உடல்நிலை சரியானதும் மெக்காவுக்கு வருவதாக குடும்பத்தினர் வேண்டியுள்ளனர். அதன் படி இப்போது ஷாருக் தனது தாயுடன் மெக்காவுக்கு செல்ல அங்கு உள்ள தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஷாருக் கபூர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை இந்தியா கொண்டுவராமல் மெக்காவிலேயே அடக்கம் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Categories Uncategorized

Leave a Comment