அஜித் ஒரு ஹாலிவுட் ஹீரோ – பாராட்டிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்

பில்லா, மங்காத்தா திரைப்படங்களுக்கு பின் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மாறியவர் நடிகர் அஜித். அப்படங்களில் நடித்த பின் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை ‘தல’ என கொண்டாடி வருகின்றனர். இவரின் திரைப்படங்கள் வெளியாகும் போது அதை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ‘தபாங் 3’ பட விளம்பரத்திற்காக சென்னை வந்திருந்தார். அவரிடம் அஜித்தின் புகைப்படத்தை காட்டி இவரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு ‘ ஹாலிவுட் ஹீரோ மேனரிசம் உள்ள ஒரு தமிழ் நடிகர். அவர் நடித்த வாலி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டாரின் இந்த பாராட்டு தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Published by
adminram