நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடிக்க உள்ள நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அந்த படம் உருவாகி வருகிறது.
கன்னட தயாரிப்பு நிறுவனங்களும், கன்னட இயக்குனர்களும் தமிழ் சினிமா நடிகர்களை தங்கள் படங்களில் நடிக்க வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தில் விஜய் மற்றும் சூர்யாவின் படங்கள் உருவாகப் போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் கேஜிஎஃப் படங்களை தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கினார். அதன் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக அஜித் குமாரை வைத்து இரண்டு படங்கள் இயக்கப் போவதாகவும் கேஜிஎஃப் 3ம் பாகத்தில் அஜித் இடம் பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தளபதி 69-வது படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ள நிலையில், சூர்யா கங்குவா மற்றும் சூர்யா 44 படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இடத்தை மீண்டும் பிடிக்க முயற்சித்து வருகிறார்.
யாருக்கும் முதலிடத்தை விட்டு கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அஜித் சினிமாவில் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர். அடுத்தடுத்து அஜித்குமார் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் ஆன்லைனில் ஹேப்பியாகி உள்ளனர்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கும் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…