அஜித், விஜய்யை நேரில் சந்திக்கின்றாரா முக ஸ்டாலின்?

19f6987e23583d109bdc98bdbac883b4

சமீபத்தில் மத்திய அரசு இயற்றிய குடியுரிமை சீர் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் துப்பாக்கிச் சூடு, பேருந்துக்கு தீ வைப்பு, உள்பட போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திமுக சார்பில் ஸ்டாலின் சார்பிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில் வரும் 23ஆம் தேதி அனைத்து கட்சிகளுடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான பேரணி நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் கலந்துகொள்ள கமல்ஹாசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த போராட்டத்தில் நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து அவர் ஒரு சில முக்கிய நடிகர்களை நேரில் சென்று பார்த்து போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க போவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அஜித் மற்றும் விஜய்யை அவர் நேரில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அஜித், விஜய் ஆகிய இருவரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை என்றாலும் வரும் 23ஆம் தேதி திமுக நடத்தும் இந்த பேரணி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Related Articles

Next Story