கர்நாடகாவைச் சேர்ந்த நடிகௌ ஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா மற்றும் ரிச்சி ஆகியத் தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த நேர்கொண்ட பார்வைத் திரைப்படம அவரை தமிழகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னைத் தானே வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த மாதம் மார்ச் 16 ஆம் தேதி அவர் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் விமானப் பயணம் செய்துள்ளதால், அவரை அதிகாரிகள் அவரைத் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைக் கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட அவர் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருப்பது வெறுப்பாக இருப்பதாகவும் டிக்டாக் போன்ற செயலிகளை டவுன்லோட் செய்தாலும் அதை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து லைவ் சாட்டில் வந்த அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
OTT Tamil:…
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…
Surya: சூர்யா…
விடாமுயற்சி படத்தின்…