போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. ஆனால், கொரோனா பரவலால் படப்பிடிப்பு தடைபட்டு தற்போது இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது அது சாத்தியமா என்பது தெரியவில்லை. எனவே, இந்தியாவிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
எப்படி பார்த்தாலும் ‘வலிமை’ படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேபோல், அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பும் அக்டோபார் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தே இயக்குகிறார்.
மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தை 2022ம் ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமையை தொடர்ந்து மூன்றவதாக போனிகபூர்- ஹெச்.வினோத் – அஜித் கூட்டணி இணவைது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…