Categories: latest news

வான்மதி முதல் விடாமுயற்சி வரை.. அஜித்தின் பொங்கல் ரிலீஸ் படங்களை பற்றிய ஒரு பார்வை

அஜித்:

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவருடைய படங்களுக்கு நல்ல ஒரு ஓப்பனிங் இதுவரை இருந்து வருகிறது. இந்த வருடம் பொங்கலுக்கு எப்படியாவது அஜித் படம் வந்து விடாதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்க லட்டாக ஒரு செய்தியை அறிவித்திருக்கிறது விடாமுயற்சி பட குழு. விடாமுயற்சி படம் வருமா வராதா என்ற ஒரு நிலைமையில் இருக்க எப்படியோ படப்பிடிப்பை முடித்து விட்டு பொங்கல் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் விடாமுயற்சி டீம். ஜனவரி பத்தாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் அஜித்தின் என்னென்ன படங்கள் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியானது? அதில் எந்தெந்த படங்கள் வெற்றி அடைந்தன என்பதை பற்றி தான் இப்போது பார்க்க இருக்கின்றோம்.

வான்மதி:

அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த காதல் கோட்டை படத்தின் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த முதல் திரைப்படம் வான்மதி. 1996 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இது அந்த வருட பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகி 100 நாள் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இதுதான் அஜித்தின் முதல் பொங்கல் ரிலீஸ் திரைப்படம் ஆகும்.

தீனா:

அதன் பிறகு காதல் மன்னனாகவே சுற்றிக் கொண்டிருந்த அஜித்தை ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் தீனா. இது 2001 ஆம் ஆண்டு வெளியானது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த இந்த திரைப்படம் அந்த வருட பொங்கல் ரிலீஸில் வெளியானது. அஜித்திற்கு பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்த திரைப்படமும் இந்த தீனா திரைப்படம் தான். இதுவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியது.

ரெட்:

தீனா படத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ரெட் .பிரபல காமெடி நடிகரான சிங்கம் புலி முதன் முதலில் இயக்கிய திரைப்படம் ரெட். இந்த படத்தில் அஜித் மிகவும் குண்டாக காணப்படுவார். ஆனால் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது .

பரமசிவன்:

சந்திரமுகிக்கு பிறகு வாசுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரமசிவன். அஜித் இந்த படத்தில் தன் உடலை மிகவும் இளைத்து ஒல்லியாக தோன்றியிருப்பார். சந்திரமுகி வெற்றி குஷியில் இருந்த ரசிகர்கள் இந்த படத்தையும் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுவும் தீனா படத்தில் முதன் முதலில் ஒன்று சேர்ந்த அஜித் லைலா அதன் பிறகு இணையும் இரண்டாவது படமாக இந்த பரமசிவன் திரைப்படம் அமைந்தது. அந்த ஒரு எதிர்பார்ப்பும் இந்த படத்தில் இருந்தது .ஆனால் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை.

ஆழ்வார்:

அதற்கு அடுத்தபடியாக 2007 ஆம் ஆண்டு செல்லா இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் ஆழ்வார். இது வழக்கமான குடும்ப பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. அதே வருடம் விஜயின் போக்கிரி திரைப்படமும் வெளியானதால் ஆழ்வார் திரைப்படம் அஜித்துக்கு கை கொடுக்கவில்லை. இதுவும் அந்த வருட பொங்கல் அன்றுதான் ரிலீஸ் ஆனது.

வீரம்:

அடுத்தடுத்த தோல்வி அதன் பிறகு மங்காத்தாவின் வெற்றி அதனை அடுத்து சுமார் அஜித் நடிப்பில் ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியான திரைப்படம் வீரம். 2014 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக இந்த படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதன் மூலம் சிறுத்தை சிவாவுடன் முதன் முதலில் அஜித் இணைந்தார். படத்தை ரசிகர்கள் வச்சு கொண்டாடினார்கள் .வீரம் திரைப்படத்தோடு விஜயின் ஜில்லா திரைப்படமும் வெளியானது .ஆனால் இந்த இரு திரைப்படங்களில் வீரம் திரைப்படம் மட்டுமே வசூலிலும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விஸ்வாசம்:

இதன்பிறகு 2019 ஆம் ஆண்டு அதே சிறுத்தை சிவாவுடன் மீண்டும் அஜித் இணைந்த திரைப்படம் விசுவாசம். இதுவும் ஒரு குடும்ப பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. இதில் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அந்த பாச போராட்டம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது .இதுவும் அதே வருடம் பொங்கல் ரிலீஸில் வெளியானது .தல பொங்கல் தல பொங்கல் என அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

துணிவு:

இந்த படத்திற்குப் பிறகு கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் எப்பேர்ப்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். இந்த படத்தோடு விஜயின் வாரிசு திரைப்படமும் மோதியது. வாரிசை விட துணிவு படத்திற்கு மக்கள் பெருமளவு ஆதரவை கொடுத்தனர். வசூலிலும் விமர்சன ரீதியாகவும் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இப்படி தொடர்ந்து பொங்கல் ரிலீஸில் அஜித் தொடர்ந்து வெற்றி பெற அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. அதனால் விடாமுயற்சி திரைப்படமும் கண்டிப்பாக வெற்றி அடையும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

23 hours ago