தனுஷுடன் மீண்டும் இணையும் அஜித் பட நிறுவனம்: இயக்குனர் யார் தெரியுமா?

அஜித் நடித்த விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம், தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை சமீபத்தில் தயாரித்து வெளியிட்டது என்பதும் அந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’துருவங்கள் பதினாறு’ ’நரகாசுரன்’ மற்றும் ’மாஃபியா’ ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் ’மாஃபியா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ், கார்த்திக் நரேன் இணையும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தனுஷின் 43 வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என தெரிகிறது. மேலும் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

Published by
adminram