அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் – டிவிட்டர் இந்தியா அதிகாரி வேண்டுகோள் !

நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என டிவிட்டர் இந்தியாவின் பாட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் டிவிட்டர் டிரண்ட்டிங்கில் அதிகளவில் இடம்பிடிக்கும் இரண்டு பெயர்கள் என்றால் அது அஜித், விஜய்தான். அதிலும் அஜித் ரசிகர்களின் கோட்டை என்றே டிவிட்டரை சொல்லலாம். ஆனால் அஜித் டிவிட்டரில் இல்லை. அவரது சக போட்டியாளரான விஜய்யின் பெயரில் கூட ஒரு டிவிட்டர் ஐடி செயல்பட்டு வந்தது. அதன் மூலம் ரசிகர்களோடு தொடர்புகொண்டு வந்தார்.

இந்நிலையில் அஜித் டிவிட்டருக்கு வர வேண்டும் என்று டிவிட்டர் இந்தியாவின் பார்டனர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் பெருமையாக பரப்பி வருகின்றனர்.

Published by
adminram