அஜித் அடங்க மாட்டார்… யார் பேச்சையும் கேட்க மாட்டார்… எஸ்.ஜே. சூர்யா பேட்டி

அஜீத்தை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன்பின் இருவரும் இணைய வில்லை. ஆனாலும், பல பேட்டிகள் அஜித் பற்றிய பல அனுபவங்களை எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் வாலி பட அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

வாலி படம் எடுக்கும் போது முதுகுவலியால் அஜித் மிகவும் சிரமப்பட்டார். அந்த வேதனை மிகவும் கொடியது. ஒருமுறை முதுகில் வைக்கப்பட்டிருந்த நட்டையெல்லாம் எடுத்துவிட்டு  மருத்துவமனையில் படுத்திருந்தார். நான் படப்பிடிப்பை தள்ளி வைத்தேன். ஆனால், ஷூட்டிங் போவோம் எனக்கூறி வந்துவிட்டார். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வாலி க்ளைமேக்ஸ் காட்சியில் கீழே இருந்து ஒரு ஷூ ஸ்டாண்டை எடுத்து ஏறிய வேண்டும்.  அந்த சீன் ரொம்ப லோ ஆங்கிள். அதுவும் முதுகில் இவ்வளவு பிரச்சினை வைத்துக் கொண்டு செய்வது முடியாது காரியம். ஆனால் அதை அஜித் வெறிகொண்டு செய்தார். அவர் ஒரு மான்ஸ்டர்’ என எஸ்.ஜே. சூர்யா கூறியுள்ளார்.

Published by
adminram