மீண்டும் கார் விபத்தில் சிக்கியது ஏகே!.. கூலா பேட்டி கொடுக்கிறாரே தல!..

by சிவா |
மீண்டும் கார் விபத்தில் சிக்கியது ஏகே!.. கூலா பேட்டி கொடுக்கிறாரே தல!..
X

Ajithkumar: அஜித்துக்கு சினிமா என்பது தொழில் மட்டுமே. பைக் ஓட்டுவது, கார் ரேஸில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். வாலிப வயது முதலே பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அமராவதி படத்தில் நடித்ததற்காக வாங்கிய முதல் சம்பளத்தில் அவர் வாங்கியது ஒரு பைக்தான்.

கார் விபத்து: சினிமாவில் நடித்துக்கொண்டே பைக் மற்றும் கார் ரேஸ்களிலும் கலந்து கொண்டார். அப்போது பலமுறை விபத்துகளிலும் சிக்கினார். இதனால் அவரின் முதுகில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. அதற்காக நிறைய ஸ்டீராய்டு மருந்துகளை அவர் எடுத்துக்கொண்டதில் திடீரென அவரின் உடல் எடை அதிகரித்துவிடும்.

அதனால்தான் பல படங்களில் அந்த உடல் தோற்றத்தோடே நடித்தார். இதைவைத்து அவரை பலரும் நக்கலடித்திருக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் அவர் விளக்கம் அளித்தது இல்லை. தனக்கு பிடித்த விஷயங்களை செய்து கொண்டே இருக்கிறார். ஷாலினியை திருமணம் செய்தபின் பைக் மற்றும் கார் ரேஸில் அஜித் கலந்துகொள்ளவில்லை.

துபாய் கார் ரேஸில் வெற்றி: ஆனால், சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் கலந்துகொண்டது. இதில், அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. ஆனாலும், அஜித்தின் டீம் இந்த ரேஸில் 3வது பரிசை பெற்றது. இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன்பின் ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் கார் ரேஸில் கலந்துகொள்ள அஜித்தின் டீம் சென்றது. ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த அஜித் 'இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் கலந்துகொள்வேன். சினிமாவில் நடிக்க மாட்டேன்' என சொன்னார். சமீபத்தில் அவரின் நடிப்பில் விடாமுயற்சி படமும் வெளியானது.

மீண்டும் விபத்து: இந்நிலையில், போர்ச்சுகளில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் ஒட்டிய கார் விபத்தில் சிக்கியது. இது அவரின் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஊடகம் ஒன்றில் பேசிய அஜித் ‘இன்றைய பயிற்சியின் போது கார் விபத்துக்குள்ளானது. அந்த காரை மெக்கானிக் குழு சரி செய்துவிட்டனர். எனக்கு பெரிய காயம் இல்லை. எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி’ என கூறியிருக்கிறார்.

Next Story