latest news
கடவுளே அஜித்தே!. விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடிகையை சிரிக்க வைத்த ஏ.கே!…
Ajithkumar: தமிழ் சினிமாவில் ஹேண்ட்சம் ஹீரோவாக வலம் வருபவர் அஜித்குமார். அமராவதி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி சாக்லேட் பாய் லுக்கில் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறியவர். ஆக்ஷன் ஹீரோவாக மாறினால் அடுத்து மாஸ் ஹீரோ என்பதற்கு அஜித் மட்டும் விதிவிலக்கா?.. தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது.
விஜய் அஜித் ரசிகர்கள்: விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் உருவானபோதே அஜித்துக்கும் ரசிகர்கள் உருவாகி வந்தார்கள். ரஜினி – கமலுக்கு பின் விஜய் – அஜித் இருவரும் போட்டி நடிகர்களாக மாறினர். சில படங்களில் வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். இதனால், இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர்.

ரசிகர்கள் மோதல்: அதுவும் டிவிட்டர் வந்தபின் விஜயை அஜித் ரசிகர்கள் அசிங்கமான வார்த்தைகளில் திட்டி ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்தனர். அதற்கு பழிவாங்கும் விதமாக விஜய் ரசிகர்களும் அஜித்தை திட்டி ஹேஷ்டேக் போடுவார்கள். இதை பல வருடங்களாக அவர்கள் செய்து வருகிறார்கள். ‘இப்படி செய்ய வேண்டாம்’ என அஜித் மட்டுமே அவரின் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னார். விஜய் இதுபற்றி பேசவே இல்லை.
தீனா படத்திற்கு பின் அஜித்தை ‘தல’ என்றே ரசிகர்கள் அழைக்க துவங்கினார். ஆனால், அப்படி அழைக்க வேண்டாம், அஜித்குமார் அல்லது ஏ.கே இப்படி அழைத்தால் போதும் என அஜித் அறிக்கை வெளியிட்டார். அதன்பின் தல என அழைப்பது ஓரளவுக்கு குறைந்துபோனது.

கடவுளே அஜித்தே: அதன்பின் ‘கடவுளே அஜித்தே’ என்கிற கோஷம் கிளம்பியது. பல இடங்களிலும் இந்த கோஷத்தை அஜித் ரசிகர்கள் சொல்ல துவங்கினார்கள். இது அஜித்தின் காதுக்கு போக ‘பொது இடத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் படி ‘அஜித்தே கடவுளே’ என அழைக்க வேண்டாம்’ என அறிக்கை விட்டார். தற்போது அதுவும் குறைந்திருக்கிறது.
இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் பற்றி அந்த படத்தில் நடித்த நடிகை சௌமியா பாரதி என்பவர் அவரின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் படப்பிடிப்பில் நடித்து முடித்து மிகவும் டயர்டாக வந்த அஜித் சார் ‘கடவுளே’ என்று சொல்லிகொண்டே அமர்ந்தார். கொஞ்சம் இடைவெளி விட்டு அருகில் இருந்த என்னைப்பார்த்து ‘அஜித்தே’ என்று சொல்லி சிரித்தார். நான் தெறிச்சிட்டேன். அவரின் நகைச்சுவை உணர்வு அப்பதான் எனக்கு தெரிஞ்சது’ என சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து, ‘அப்புறம் ஏன் சார் அஜித்தே கடவுளேன்னு சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க?’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.