சிறுத்தை சிவாவிடம் சொன்ன அதே வார்த்தை!.. மகிழ் திருமேனியிடமும் சொன்ன அஜித்!..

by சிவா |
சிறுத்தை சிவாவிடம் சொன்ன அதே வார்த்தை!.. மகிழ் திருமேனியிடமும் சொன்ன அஜித்!..
X

Ajithkumar: அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டார் அவருடன் இணைந்து பல படங்கள் செய்வார். வீரம் என்கிற படத்தில் சிறுத்தை சிவாவுடன் இணைந்தார் அஜித். சிவா பேசும் விதம், நடந்துகொள்ளும் விதம் எல்லாமே அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனது.

சிறுத்தை சிவா: எனவே, தொடர்ந்து அவரின் இயக்கத்தில் 4 படங்களில் நடித்தார். வீரம் படத்திற்கு பின் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 3 படங்களில் நடித்தார் அஜித். வேதாளம் படத்திற்கு பின் அஜித்திடம் இரண்டு கதைகளை சொன்னார் சிவா. ஒன்று விஸ்வாசம். இன்னொன்று விவேகம். அதில் விவேகம் கதையை தேர்ந்தெடுத்தார் அஜித். ஆனால், அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

விவேகம் தோல்வி: அவ்வளவு உழைப்பை போட்டு படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் அப்செட் ஆனார் சிவா. அஜித் அவருக்கு நம்பிக்கையை கொடுத்து ‘என்னிடம் வந்துவிட்டு நீங்கள் ஒரு தோல்விப்பட இயக்குனராக போகக்கூடாது’ என சொல்லி அடுத்து விஸ்வாசம் படத்தில் இருவரும் இணைந்தார்கள். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

இயக்குனர் ஹெச்.வினோத்: அதேபோல், ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு அவரையும் பிடித்துப்போனது. எனவே, தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார். இதுதான் அஜித்தின் ஸ்டைல். அதேநேரம், அஜித்துக்கு பிடிக்காத ஒன்றை அந்த இயக்குனர் செய்துவிட்டால் அதோடு அவர்களை ஒதுக்கிவிடுவார். மங்காத்தா ஹிட் அடித்தும் வெங்கட்பிரபுவுக்கு அஜித் படம் கொடுக்காதது இதனால்தான். இந்த லிஸ்ட்டில் முருகதாஸும் இருக்கிறார்.

தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களை முடித்துவிட்டார். இதில், விடாமுயற்சி வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவிருக்கிறது. குட் பேட் அக்லி வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

’எல்லாரும் நெகட்டிவா பேசுவாங்க. அதுக்கு ரெடியா இருங்க. நாம் இணைந்து இன்னும் நிறைய படங்கள் செய்ய போகிறோம். இதைத்தான் நான் சிவாவிடம் சொன்னேன். ஹெச்.வினோத்திடமும் சொன்னேன். உங்களிடமும் இதைத்தான் சொல்கிறேன். உங்களுடன் நான் எப்போதும் நிற்பேன். நெகட்டிவை விட்டுத் தள்ளுங்கள். உங்களின் வேலையை நான் பார்த்திருக்கிறேன். உங்களின் திறமை பற்றி எனக்கு தெரியும்’ என சொன்னார்.

Next Story