விடாமுயற்சி ஹிட் அடிக்கிறது விஷயம் இல்ல!. இது நடந்தா அஜித் செம ஹேப்பி!...

Vidaamuyarchi: பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. துணிவு படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
மாஸ் காட்சிகள்: ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றியமைக்கப்பட்டது. பொங்கலுக்கு வரவேண்டிய படம் பிப்ரவரி 6ம் தேதியான இன்றுதான் வெளியானது. இந்த படம் பற்றி நிறைய ஊடகங்களில் மகிழ் திருமேனி பேசினார். அப்படி பேசும்போது ‘வழக்கமாக அஜித் படத்தில் இருக்கும் மாஸ் காட்சிகள் இதில் இருக்காது. அஜித்தின் கூஸ்பம்ஸ் எண்ட்ரி சீன் இருக்காது. இது பக்கா ஆக்சன் திரில்லர் கிடையாது. நீங்கள் எதிர்பார்க்கும் டிஸ்ட்டோடு கூடிய இண்டர்வெல் சீன் இருக்காது. அப்படி கற்பனை செய்து இந்த படத்தை பார்க்க வராதீர்கள். ஆனால், படம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் என சொல்லியிருந்தார்.
விடாமுயற்சி விமர்சனம்: எனவே, ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் படம் பார்க்க போனார்கள். அசர்பைசான் நாட்டின் அழகு, அஜித் - திரிஷா இடையேயான ரொமான்ஸ், அனிருத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஹாலிவுட் ஸ்டைலில் திரைக்கதை என ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க படம் நன்றாக இருக்கிறது என எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
படத்தின் முதல் பாதியில் அஜித்தை அடங்கிப்போவது போலவும், ஆரவிடம் அடி வாங்குவது போலவும் காட்டியிருக்கிறார்கள். எந்த நடிகரும் இப்படியெல்லாம் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனால், அப்படி நடித்து ஒரு புதிய பாதையை போட்டு கொடுத்திருக்கிறார் அஜித். மேக்கிங் படி பார்த்தால் தமிழில் இது தரமான ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.
படத்தில் நடிக்க காரணம்: இந்த படம் உருவாகும்போது ‘இதில் மாஸான காட்சிகள் இல்லை’ என சிலர் அஜித்துக்கு நெருக்கமானவர்களே சொன்னபோது ‘என் ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது’என சொனனார் அஜித். படத்தில் மாஸான காட்சிகள் இல்லையென்றால் உங்கள் ரசிகர்கள் ஏமாந்துபோவர்கள் என மகிழ் திருமேனி சொன்னபோது ‘இந்த படத்தில் வேண்டாம். அதை நாம் அடுத்த படத்தில் செய்வோம்’ என அஜித் சொலிவிட்டார். இந்நிலையில், இந்த படம் பற்றி பேசிய அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ‘காதல் என்பது ரொமான்ஸ் இல்லை. அது அக்கறை எடுத்துக்கொள்வது’ என்பதுதான் அஜித் சாரின் நிலைப்பாடு.
கடந்த 5 வருடங்களாகவே பெண்களை மதிக்கும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். அஜித் சார் தன்னை ‘தல’ ன்னு கூப்பிட்டாதிங்கன்னு சொன்னப்ப அதை கேட்டாங்க.. ‘அஜித்தே கடவுளே’ன்னு கூப்பிட்டாதீங்கன்னு சொன்னப்பவும் கேட்டாங்க.. அதேமாதிரி இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித் ரசிகர்கள் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொண்டால் அவர் மிகவும் சந்தோஷப்படுவார்’ என சொல்லி இருக்கிறார்.