தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த, கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’வரலாறு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்றும் அஜீத்தின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு சாதனை வசூல் சாதனை செய்த படம் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் கதை கமல்ஹாசஞுக்காக கே எஸ் ரவிக்குமார் எழுதியதாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும், அதன்பின்னர் ரஜினி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதொடு அவரே ஒரு டைட்டிலையும் கூறியதாக கே.எஸ்,.ரவிகுமார் தெரிவித்தார்.
இருப்பினும் ஒரு சில காரணங்களால் ரஜினி இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் அதன்பின்னர் அஜித் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதை அடுத்து இந்த படம் உருவாகியது என்று கே.எஸ்,.ரவிகுமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் வரலாறு திரைப்படத்தில் ஒருவேளை கமல் அல்லது ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால் இந்த படம் எப்படி இருந்திருக்கும் என்பதை ரசிகர்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…