அஜித்தின் அடுத்தபட வில்லன் விஜய்சேதுபதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய் நடித்துவரும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்தப் படத்தை இயக்குவது யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி ’அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் முக்கிய வேடம் மட்டுமின்றி வில்லன் உள்பட எந்த வேடம் கிடைத்தாலும் அவருடைய படத்தில் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்படும் பிரபல இயக்குனர் ஒருவர் விஜய்சேதுபதியை அணுகி அஜித்துக்கு வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Published by
adminram