ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த சூரரைப் போற்று "ஆகாசம்" பாடல்!
இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சூர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.
8 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் படத்தை வருகிற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படம் கிடு கிடுவென ரிலீஸை நோக்கி வருவதால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி நேற்று இப்படத்தில் இடம்பெறும் "ஆகாசம்" பாடல் வீடியோவை படக்குழு யூடியூபில் வெளியிட்டிருந்தனர். வெளியான ஒரே நாளில் 734,410 பார்வையாளர்ளை கடந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.