கூலி பட நடிகரின் மகனுக்கு ஜோராக நடந்த திருமணம்!.. சந்தோஷத்தில் அகில் அக்கினேனி!..

Published on: August 8, 2025
---Advertisement---

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களில் இளைய மகனான அகில் அக்கினேனியின் திருமணம் இன்று காலை கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

நடிகர் நாகார்ஜுனா 1986இல் தெலுங்கில் வெளியான விக்ரம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கீதாஞ்சலி, அன்னமய்யா, சிவா, நின்னே பெல்லடதா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் “கிங் நாகார்ஜூனா” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தமிழில் ரட்சகன் மற்றும் தோழா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக இந்த ஆண்டு தனுஷின் குபேரா மற்றும் ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட படங்களிலும் நாகார்ஜுனா நடித்துள்ளார்.

நாகார்ஜுனா முதல் மனைவி லஷ்மி ராமா நாயுடு. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுடைய மகன் நாக சைதன்யா. பின்பு இரண்டாவதாக நடிகை அமலாவை மணந்துக்கொண்டார், இவர்களுக்கும் அகில் அக்கினேனி என ஒரு மகன் உண்டு. இவரது மகன்கள் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி இருவரும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள்.

நாக சைத்தன்யா 2017ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். இருவரும் 2021இல் விவாகரத்து பெற்றனர். அதை தொடர்ந்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் இன்று நாகார்ஜுனாவின் இரண்டாவது மகனான அகில் அக்கினேனி ஓவியர் மற்றும் வாசனை திரவிய நிபுணரான ஜைனபை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனாவின் இல்லத்தில் இன்று காலை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து, ஜூன் 8 ஆம் தேதி அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் மிக பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், திருமணம் குறித்து நாகர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் ஜைனப்பை குடும்பத்தில் வரவேற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment