பாலிவுட்டில் உருவாகும் ராட்சசன்… ஹீரோ அவர்தானாம்!…

2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்ட பலரும் நடித்து சூப்பர் கிரைம் திரில்லராக உருவான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் வெற்றிப்படமாகியது. ஏனெனில், இருக்கையின் நுனியில் ரசிகர்களை உட்கார வைக்கும் பல காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்படம் தற்போது பாலிவுட்டில் தயாராகவுள்ளதாம். விஷ்ணு விஷால் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
adminram