அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – இரண்டு கார்களை பரிசாக அனுப்பிய முதல்வர் !

Published on: January 17, 2020
---Advertisement---

076e5e7960ef43215cdfc287e4560d7b-2

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக முதல்வர் பரிசாக இரு கார்களை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இந்த வருடம் சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பொங்கலன்று பாலமேட்டிலும் மாட்டுப் பொங்கலன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் நடந்தன. இன்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர் ஒருவருக்கு ஒரு சாண்ட்ரோ காரும், சிறப்பாக விளையாடும் காளை ஒன்றுக்கு ஒரு சாண்ட்ரோ காரும் பரிசாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்து ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவித்துள்ளார்.

Leave a Comment