குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் கலந்து கொள்வதாக முதலில் அறிவித்து விட்டு, அதன் பின் திடீரென கமலஹாசன் பின் வாங்கியது குறித்து பாஜக பிரமுகர் நாராயணமூர்த்தி அவர்கள் கூறியதாவது:
கமலஹாசனை பொருத்தவரை குடியுரிமை விவகாரம் குறித்து ஒரு தெளிவில்லாத நிலையிலேயே அவர் இருந்திருக்கின்றார். அவருக்கு குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அதேபோல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு என்றால் அவருக்கு என்ன என்று புரியவில்லை. புரியாத ஒரு விஷயத்தை புரிந்தது போல் அவர் முன்னெடுத்ததன் விளைவே இந்த குழப்பம்
சாதாரணமாகவே அவர் பேசுவது யாருக்கும் புரியாத நிலையில், அவருக்கு புரியாத ஒன்றை புரிந்தது போல் அவர் பேசியது தான் வினைதான், திமுகவுக்கு ஆதரவாக சொல்வது போல் சொல்லி பின்னர் ஐயோ நாம் தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணத்தில் அவர் மாற்றிக் கூறி இருக்கிறார் என்று கூறினார்
மேலும் ரஜினிகாந்த் குறித்து உதயநிதி தனது டுவிட்டரில் தெரிவித்தது குறித்து கூறிய நாராயணமூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் அவருடைய லெவலுக்கு அவர் கருத்து சொல்லியிருக்கிறார். ரஜினிகாந்த் குறித்து கருத்து சொல்லும் அளவுக்கு உதயநிதி இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய காமெடிதான். உதயநிதி மட்டுமின்றி திமுகவினர் முழுவதுமே இவ்வாறு தரம்தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று நாராயணமூர்த்தி கூறினார்
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…