காவலர்களைத் தாக்கிவிட்டு சாராய வியாபாரிகள் தப்பி ஓட்டம் ! – தஞ்சையில் பரபரப்பு !

தஞ்சை ஒரத்தநாடு அருகே சாராய வியாபாரிகள் கைது செய்ய சென்ற போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதுவிடுதி கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர்.  அப்போது சாராயம் விற்ற ராஜூ, அருள் பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ராஜூ கைது செய்யப்பட மற்ற இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் அவர்கள் இருவரும் புது விடுதி கடைத்தெருவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வர அங்கு சென்று அவர்களை கைது செய்ய முயன்றனர்.ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீசார் தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Published by
adminram